நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபா பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மொனராகலை கொடியான பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கி வருகிறது என வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை அனுராதபுரம் ராஜாங்கன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, அரசாங்கத்திடம் பணத்தட்டுபாடு காணப்படுவதாக கூறியுள்ளார்.

Latest Offers

loading...

Comments