பிரபாகரன் - பாலசிங்கம் செய்ய முடியாதை சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஜோடி செய்து விடும்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் முதுகெலும்பில்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால், பிரபாகரன் - பாலசிங்கம் ஆகிய இருவருக்கும் செய்ய முடியாததை சம்பந்தன்- விக்னேஸ்வரன் ஜோடி செய்து முடித்து விடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியது.

நாட்டை புதிதாக்க மக்களிடம் வாக்கு கோரவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். புதிய நாட்டை உருவாக்கவே மக்களிடம் வாக்கு கேட்டனர்.

அப்படியானால், உலக வரைப்படத்தில் மேலும் ஒரு புதிய நாட்டை இணைப்பது. மக்களும் வரிசையாக சென்று யானைக்கு வாக்களித்தனர். 60 மாதங்கள் இன்னும் கழியவில்லை. 13 மாதங்களில் புதிய நாடு உருவாகியுள்ளது.

டென்மார்க்கில் தமிழீழம் என்ற தனியான நாடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.டென்மார்க் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வீசாவை பெற்றுக் கொள்ளும் போது தமது தாய் நாட்டை தெரிவு செய்யும் பட்டியல் முன்வைக்கப்படும். அந்த பட்டியலில் தமிழீழம் உள்ளது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் புள்ளிவிபரத் திணைக்களத்தில் தமிழீழம் சேர்க்கப்பட்டிருந்தது.அங்குள்ள தூதரகம் எதனையும் செய்யவில்லை. அந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அதனை மாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் இணங்கியது.

அங்கு கணக்கெடுப்பு நடத்தப்படடு, இலங்கைக்குள் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் போதே இலங்கை வெளிவிவகார அமைச்சு அதற்கான தனது எதிர்ப்பை வெளியிட்டது.

சுயாதீன நாடு உருவாகும் முன்னர், நிலம் இருப்பதை விட வேறு நாடுகள் அதனை அங்கீகரிப்பதே முக்கியமானது.

பாலஸ்தீனத்திற்கு நிலம் இருக்கவில்லை. உலகில் பல நாடுகள் அங்கீகரித்ததால், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் அங்கம் பெற முடிந்தது. நிலம் இல்லை என்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

மறுபுறம் தாய்வான் இலங்கையை விட பெரிய நாடாக இருந்த போதிலும் உலக நாடுகள் அந்த நாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இந்த பின்னணி காரணமாக தமிழீழ போராட்டம் தோல்வியடைந்த பின்னர், இராஜதந்திர நடவடிக்கை ஊடாக தமிழீழ ராஜ்ஜியத்தை வென்றெடுப்பதற்காக பிரிவினைவாதிகள் வீ. ருத்ரகுமாரன் பிரதமராக நியமித்து நிலமற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கினர்.

இவர்களின் நிலைப்பாட்டை உலகம் முழுவதும் அங்கீகரிக்கும் வகையில், உலகம் முழுவதும் இராஜதந்திர போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


You may like this video
மக்காவுக்கான புனித பயணம் - முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று!

Latest Offers

loading...

Comments