எம்முடன் கலந்தாலோசிக்காமல் பட்ஜட்டா? வட மாகாண சபை உறுப்பினர்கள் போர்க்கொடி

Report Print Rakesh in அரசியல்

மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள், சிபாரிசுகள் எதுவும் உள்வாங்கப்படாமல், அதிகாரிகளின் கருத்துக்களை மாத்திரம் உள்வாங்கியே, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு வட மாகாணசபை நிதி கோரியுள்ளது என வடக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

வட மாகாண அரசினால், அடுத்த ஆண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 10 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

10 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் எவை என்பது தொடர்பில் தங்களுக்குத் தெரியாது எனவும் சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

வட மாகாண சபையின் முன்னைய வரவு - செலவுத் திட்ட விவாத உரையில் நான் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தேன். அதிகாரிகள் தயாரித்து தரும் வரவு - செலவுத் திட்டத்திற்கு நாம் இங்கே இருந்து ஆதரவு தர முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

தற்போதும் அதனையே செய்துள்ளனர். எங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அதிகாரிகளின் கருத்துக்களையே முதன்மைபடுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தயாரித்துள்ளனர்.

அமைச்சுமட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மக்களின் தேவைகள், செய்ய வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஏதாவது தெரிவித்தால் அதற்கு சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழிப்பார்கள்.

மத்திய அரசு நிதி தராது என்று சொல்வார்கள். 10 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவில் என்ன அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்வது என்பது எனக்குத் தெரியாது.

எங்களிடமிருந்து அதற்கான ஆலோசனையும் பெறப்படவில்லை" என்று வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, "எங்களிடம் வரவு - செலவுத் திட்டத்துக்கான கருத்துக்கள் எதனையும் உள்வாங்கவில்லை.

மத்திய அரசின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கியே வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கின்றார்.

ஆனால், வடக்கு மாகாண சபையினால் மேற்படி நிதிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளபோதும், அதில் எந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்வது என்பது தொடர்பில் எங்களிடம் எதுவும் கேட்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments