பொலிஸ் ஆணைக்குழு எங்கே? பிரஜா சக்தி அமைப்பு கேள்வி

Report Print Kumutha Kumutha in அரசியல்

ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரஜா சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவத்தில் பொறுப்பு கூற வேண்டிய பொலிஸ் ஆணைக்குழு மௌனமாகவுள்ளமையானது நாட்டில் பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உள்ளதா என எண்ணத்தோன்றுவதாகவும் இந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த அமைப்பின் தலைவரான சமன் ரத்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி இன்றும் பதவியில் இருப்பதானது இராணுவ சட்டதிட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments