உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சுதந்திரக் கட்சிக்கு சவால் கிடையாது

Report Print Kamel Kamel in அரசியல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலாக அமையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் காணப்படும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் சகோதர கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப்படும்.

கை சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு கட்சியின் பலம் நிரூபிக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல்களுக்கு அஞ்சிய கட்சி கிடையாது.

எல்லை நிர்ணயப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

இதற்கான முழுப் பொறுப்பினையும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மீதோ அல்லது பிரதமர் மீதோ இது குறித்து குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

காலி பொது மைதானத்தில் மேதினக் கூட்டத்தினை நடத்திய போதும் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வினை குருணாகலில் நடத்திய போதும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின் போதும் சிலர் எம்மை பார்த்து சிரித்தார்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்கள். எனினும் கட்சி என்ற ரீதியில் நாம் இந்த சவால்களை வெற்றிகொண்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை நாம் நிரூபிப்போம்.

யாருமில்லா வீட்டில் சட்டி, பானைகளை உடைப்போருக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் செல்ல வழியிருக்காது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments