மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விமல் ஆஜர்

Report Print Vino in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே முன்னிலையாகியுள்ளார்.

எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியும் விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments