பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசாதாரணமாக மாறிவிட்டேன்! - நிமல்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் எவரையும் தான் இணைத்து கொள்ளாததே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நாரஹென்பிட்டி சாலிகா மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் செய்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையை எப்போதும் அதற்கான வளமாக பயன்படுத்த போவதில்லை.

எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக செயற்பட போவதில்லை. எந்த அரசியல் கட்சிக்கு இலவசமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை வழங்கவில்லை.

சபையின் முன்னேற்றத்திற்காக திரைக்கு பின்னால் இருந்து செயற்படுவேன் என நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

Comments