நாளுக்கு நாள் அஸ்தமனத்தை நோக்கிச் செல்லும் மஹிந்தவின் அரசியல் பயணம்!

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை நாளுக்கு நாள் அஸ்தமனத்தை நோக்கி பயணிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஸவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட செல்வாக்கினை கொண்டு சிறு அரசியல் கட்சிகள் அவருடன் இணைந்து அரசியல் இலாபம் பெற்று வந்தன.

எனினும், அவருக்கு மக்கள் மத்தியில் காணப்படும் செல்வாக்கு குறைவடைவதனை உணர்ந்து கொண்ட அவ்வாறான சிறிய கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படும் நோக்கில் முனைப்பு காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலை மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் தனக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கை கொண்டு தனது புதல்வரான நாமல் ராஜபக்ஸவை அரசியல் ரீதியில் தூக்கி நிறுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ கனவு கண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஸவின் கனவும் கலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஸவை தைரியப்படுத்தும் செயற்பாடுகளில் கூட்டு எதிர்க்கட்சின் முக்கிய உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments