இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அட்டை

Report Print Kumutha Kumutha in அரசியல்

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய வகையில் டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் குறித்த அட்டைகளை தமது பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜைகளின் சுயவிபரங்கள் மற்றும் அவர்கள் அரச நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் குறித்த அட்டையில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டிஜிட்டல் அட்டைகள் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வழங்கப்படும் எனவும் குறிப்பிப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களின் பணிகளானது டிஜிட்டல் முறையில் இன்னும் மாற்றப்படாமல் உள்ளதால் அரச நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

Comments