கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு 7 தமிழ் அரசியல் கட்சிகள் மகஜர் கையளிக்கத் தீர்மானம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

இந்தியா கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மகஜர் கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக தீர்மானித்துள்ளது.

காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி இந்திய பிரதமருக்கு கோரிக்கை மகஜர் கையளிப்பதற்காக இலங்கைத் தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகி ய 7 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரையில் கூட் டாக இணைந்து பேச்சுவார்த்தை நட த்தியிருந்தது.

இந்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்தகோரியும், தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதை நிறுத்தகோரியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மகஜர் ஒன்றை கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை மாலை 7 மணிக்கு யாழ்.இந்திய துணை தூதுவர் நடராஜனிடம் 7 கட்சிகளினதும் பிரதிநிதிகள் கூட்டாக மகஜர் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments