மைத்திரி - மஹிந்த தரப்பை இணைக்க உயர்மட்ட கலந்துரையாடல்

Report Print Vethu Vethu in அரசியல்
262Shares

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பு மற்றும் மஹிந்த தரப்பிற்கு இடையில் பகைமையை தீர்ப்பதற்காக கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்ககா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிலருடனான உயர்மட்ட கலந்துரையாடல் சுற்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் கீழ் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்வதற்கும் கட்சியில் பிளவு ஏற்பட கூடிய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் இந்த குழு யோசனை முன்வைத்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மேற்கொள்ளப்படவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் தற்போது வரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

விரைவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிளவுபட்டுள்ள சுதந்திர கட்சியை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments