மஹிந்த இருந்திருந்தால் அந்த வானம் கூட எமக்கு மிஞ்சியிருக்காது

Report Print Sam Sam in அரசியல்
238Shares

மஹிந்த ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியிலிருக்கும் வானம் கூட இலங்கைக்கு சொந்தமாகி இருக்காது சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

போர்ட் சிட்டி உருவாக்குவது தொடர்பில் மஹிந்த ஆட்சியின் போதே சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் மஹிந்த கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் படியே தற்போதும் இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சீனா முழு ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் என கூறினார்.

ஆட்சி மாற்றத்தின் போது போர்ட் சிட்டி தொடர்பான ஒப்பந்தமும் மாற்றப்பட்டது. நல்லாட்சி அரசு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உள்ளது எனவும் அமைச்சர் அறிவித்தார்.

Comments