ஜனாதிபதியைப் பற்றி யாரும் ஒன்றும் கூற முடியாது - அமைச்சர்கள்

Report Print Sam Sam in அரசியல்
125Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக யாரும் ஒன்றும் கூற முடியாது என நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்யா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கட்சியிலிருந்து கொண்டே போட்டியிட்டுள்ளார். ஆகவே இவர் கட்சியின் தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது எனவும், நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

மேலும் நாட்டில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதாகவும், இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றும் மக்களை கேட்டுக்கொண்டார்.

பயிர்ச்செய்கைக்கும், மின் உற்பத்திக்கும் நீர் அத்தியாவசியமாக காணப்படுவதால் மக்களிடம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இதில் கலந்துகொண்ட பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பெற்றோலியத்துறையினால் தற்போது 46.5 பில்லியன் இலாபம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

இது கடந்த வருடத்தையும் விட அதிகளவான வருமானத்தை ஈட்டித்தந்துள்ளதாக சந்திம கூறினார்.

மேலும், தாம் முன்னெடுத்துள்ள பல வேலைத்திட்டங்கள் வெற்றியளித்தமையினாலேயே இந்த வருமானம் கிட்டியுள்ளதாகவும் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

Comments