நண்பரை பார்வையிட சிறைக்கு சென்ற மஹிந்த!

Report Print Kumutha Kumutha in அரசியல்
504Shares

குற்றப்புலனாய்வு பிரிவினரால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்சவுடன், அவரது மகன் யோசித்த ராஜபக்சவும் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சானுக ரத்வத்தையையும் மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டு, நலம் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைக்கைதிகளுக்கு மத்தியில் மகிந்த! வெலிகடையில் இன்று

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அலுத்கமகேவை பார்ப்பதற்காகவே அவர் இன்று சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என அவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவரது மகன் யோஷித ராஜபக்சவும் சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தானந்த அலுத்கமகேவை சந்தித்ததனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சானுக ரத்வத்தேயும் மஹிந்த சந்தித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரங்களை இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக சிறைச்சாலைகளுக்கு சென்றுவருவது தொடர் கதையாகியுள்ளது.

அவரின் அரசியல் வாழ்வு சிறைச்சாலைக்கும் வீட்டிற்குமாகவே முடிந்து போய்விடுமா? என்னும் அச்சம் அவர் சார்ந்தவர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Comments