2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நெருக்கடியே! சிறிதரன் எம்.பி

Report Print Murali Murali in அரசியல்
123Shares

அபிவிருத்திகள் நடைபெறுகின்றபோது சமநேரத்திலேயே தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வேலணைத் துறையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2009ம் ஆண்டிற்குப் பின்னர் நெருக்கடிகளுக்கு மத்தியில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றோம். வடமாகாண சபை உருவாக்கப்பட்டு அதனூடாகவும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இதனூடாகவே தீர்வை நோக்கியும் நகரமுடியும். எமது பிரதான இலக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதுதான். ஒரு கௌரவமான வாழ்வை அமைத்துக்கொள்வதுதான்.

அந்த கௌரவமான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் தந்த ஆணையின் பிரகாரம் அதற்குரிய வழியினைத் தேடவேண்டும். அவ்வழியினைத் தேடிக் கொண்டுதான் அபிவிருத்தியையும் நகர்த்த வேண்டும்.

வட மாகாண சபை தமிழ் மக்களுடையது. தமிழ் மக்கள் இணைந்து உருவாக்கியதே வடமாகாண சபை. அதனூடாகவும் அபிவிருத்திப் பணிகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கிராமத்தின் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கிராமத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments