இனவாதத்தை தூண்டி நாட்டை பிளவு படுத்த நினைப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கத் தயாராகும் அரசு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
160Shares

இனவாதத்தை தூண்டி அல்லது நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு நாமும் சாட்டையடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சகத்தில் இன்று இடபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்துக்கொண்டு கூச்சலிட மட்டுமே தெரிந்தவர்கள் இவர்கள்.

அவர்களின் கருத்துக்களை புரிந்துக்கொண்டு தக்க பதிலடியை மாநாயக்க தேரர்கள் கொடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கு புரிந்தது இவ்வாறான இனவாதிகளுக்கு புரிய வேண்டும்.

இந்த அரசியலமைப்பு பௌத்த சமயத்துக்கு எதிரானதெனவும், நீதிமுறைமைகளுக்கு உட்படவில்லை எனவும் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி மக்கள் மத்தியில் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலுள்ளது.

இவர்களே முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியை கவிழ்த்தவர்கள். அமைச்சரவையை புறக்கணித்து மூன்று பேர் கொண்ட குடும்ப ஆட்சியென வீதியில் இறங்கி கோசமிட்டவர்களே ஆட்சியை கவிழ்க்க காரணமானவர்கள்.

ஊடகங்கள் மத்தியில் இன்றும் இனவாதத்தை தூண்டி ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்து விட்டவர்களே இவர்கள். நடக்கவிருக்கும் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினை வெற்றி பெற வைக்கவே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

இந்நிலையில் நாட்டின் ஒருமைப்பாட்டுடன் கட்சியின் கொள்கைத் திட்டங்களுடன் ஒன்றுபட்டு செயற்படக்கூடியவர்கள் இன்று எம்முடன் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் தனிப்பட்ட வகையில் கட்சி அமைப்பதற்கு எதிர்ப்பையே கொண்டுள்ளோம்.

தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்பவர்கள் செய்வதை நாம் ஒரு பொருட்டாக கொள்ள முடியாது.

எதுவுமே இல்லாத பொழுது தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அவர்கள் அரங்கேற்றும் நாடகம் வியப்பாகவுள்ளது. நாட்டில் இனவாதத்தைத தூண்டும் வகையில் செயற்படுபவர்கள் எம்முடன் என்றும் இணைந்திருக்க முடியாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் பலமுறை இவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால் இவர்கள் சுய இலாபத்திற்காக கட்சியை காட்டிக்கொடுத்து, ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்து வருகின்றனர் என்பது உறுதியாக தெரியவருகின்றது.

இந்நிலையில் நாம் எமது நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்ட அவர், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் புதிய அரசியலமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னரே எதற்காக இனவாத்தை தூண்டி வேடிக்கை பார்க்க நினைக்கின்றார்கள் என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments