இலங்கை - இந்தியாவிற்கிடையில் நேற்றைய தினம் மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய கடல்வள பாதுகாப்பு அமைச்சர் வை.கே.சிங்கா மற்றும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் கீழ் 300 மில்லியன் பெறுமதியான மீன்படி உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஒப்பந்தம் மூலம் 75,000 மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நிவாரணங்களை பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.