இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவித்த ஐ.நாவின் பரிந்துரைகள்

Report Print Dias Dias in அரசியல்
79Shares

ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் சில பரிந்துரைகள், நாட்டின் நல்லிணக்கம், ஜனநாயகம், நல்லாட்சி என்பவற்றை ஊக்குவிப்பதாக அமைந்தது என இலங்கையின் ஜெனீவாவுக்கான பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகியது. அதில் நேற்று இடம்பெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் காணாமல் போனவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் சில பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.

குறித்த ஐ.நா. பரிந்துரைகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கான சிறந்த மைல்கல்லாக நோக்கப்படுகிறது. இதற்கமைய அரசாங்கம், உண்மை நீதி, நட்டஈடு, மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், இவ்விடயங்களில் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

சில இனவாத சக்திகள் அரசாங்கத்தின் ஆழமான முயற்சிகளுக்கு தடையாக விளங்குகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments