பஞ்ச மஹா சக்திகளினால் உருவாக்கப்பட்டதே ஸ்ரீ.சு.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்
83Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பஞ்ச மஹா சக்திகளினால் உருவாக்கப்பட்டுள்ள கட்சி எனவும் இதனால், கட்சியில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம் என அனைத்து இனத்தவரும் அங்கம் வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் சுதந்திரக் கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி வைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்குள் செய்யும் வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டி வருகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு இவ்வாறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

Comments