மூன்று வகையில் முக்கியத்துவம் பெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்
140Shares

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நியூயோர்க் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 21 ஆம் திகதி கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கலந்து கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது பொதுச் சபைக் கூட்டம் இதுவாகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் இம்முறை மூன்று வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுச் சபைக் கூட்டத்துடன் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இணைத்து அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் சம்பந்தமாக மாநாடு நியூயோர்க்கில் 19ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது இறுதி உரையை ஆற்றவுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இம்முறை பொதுச் சபைக் கூட்டத்தில் தனது பிரியாவிடை உரையை ஆற்றவுள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் எதிர்வரும் ஜனவரி மாதம் தனது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல உள்ளதுடன், அங்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments