அணிசேரா மாநாட்டில் மைத்திரிக்குப் பதிலாக மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
167Shares

வெனிசுலாவில் நாளை ஆரம்பமாகும் அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்க கலந்து கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதால், அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Comments