இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டம்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கிலிருந்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச்சபைக் கூட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது.

இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்படும் மற்றுமொரு நகர்வாகும்.

அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கும் இம்முறை பொதுச்சபைக்கூட்டம் வழியமைக்கும்.

பல்வேறு வழிகளில் இம்முறை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

பான் கீ மூன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் குறித்த பதவிகளை வகிக்கும் போது ஆற்றும் இறுதி உரைகள் இம்முறை நிகழ்த்தப்பட உள்ளது.

இலங்கையில் பாரியளவு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பொதுச் சபைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள நன்மதிப்பினை மேலும் வலுப்படுத்த இந்த பொதுச்சபைக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நாளை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இந்த பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே உலகத் தலைவர்கள் பலரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments