ஐக்கியதேசியக்கட்சி மாறவில்லை:ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே மாறியுள்ளது

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி மாறவில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தமது கொள்கையில் இருந்து மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

தேசிய அரசாங்கம் என்று சொல்லப்பட்டாலும் கூட அதில் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளே முன்னிலை பெற்றுள்ளன.

இதற்கு தகுந்தாற் போல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மாறியுள்ளனர்.

இதனையே அவர்கள் ஆட்சிமாற்றம் என்று கூறுவதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இது ஆட்சி மாற்றம் அல்ல.ஐக்கிய தேசியக்கட்சியின் சூழ்ச்சிக்குள் வீழ்ந்த செயலாகும் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments