ஜே.ஆர் கொள்கையின் நன்மை பெறப்படவில்லை

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பொருளாதார கொள்கைகளின் மூலம் இலங்கை முழுமையான நன்மையை பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் 110வது பிறந்ததின நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், ஜயவர்தனவை பொறுத்தவரையில் அவர், சோசலிஸ பொருளாதார கொள்கைகளை முழுமையாக

கைவிடாமல், திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்தார்.

இதன் அடிப்பமையிலேயே வர்த்தக வலயங்களும் உருவாக்கப்பட்டன.

எனினும் அவற்றின் நன்மைகளை இலங்கை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே குறித்தக்கொள்கைகளின் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுக்க தாம் முயற்சிப்பதாகவும் இதன்போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments