அநாதையாகி போன நவீனகால துட்டகைமுனு! காப்பாற்றப் போவது யார்?

Report Print Vethu Vethu in அரசியல்

நவீன கால துட்டகைமுனு என வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை இனத்தவரின் மீட்பராகவும், உலக நாடுகளுக்கு அஞ்சாதவர் என்றும் போற்றப்பட்டார்.

ஆனால் இன்றைய நிலையை நோக்கும் போது அவரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதே.

மஹிந்த ராஜபக்ச என்ற கதாப்பாத்திரம் இலங்கை அரசியலில் செல்லாத காசாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவே அண்மைய நிகழ்வுகள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பழமைவாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு துரோகம் செய்து, சிறிய கட்சிகளின் விருப்பு வெறுப்புகளுக்கமைய மஹிந்த தற்போது செயற்பட்டு வருகிறார். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரர்கள் இன்று அசட்டை பண்ணும் நிலைமைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள வேண்டாம் என மஹிந்த, தனது தரப்பினருக்கு கூறிய போதிலும் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டமையினையே இங்கு சிறந்த உதாரணமாக கருதப்படுகின்றது.

இன்று வரையில் விமல் வீரவன்ச போன்ற தலைவர்களின் பஸ்களை நம்பிக் கொண்டு பொம்மையை போன்று அரசியலில் ஈடுபடும் நிலைமை மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிக பேராசையின் காரணமாக இரண்டு பேரை வைத்து ஆறு பேரை பிடிக்க முயற்சித்த மஹிந்தவுக்கு, இறுதியில் அந்த இரண்டையும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தொடர் தோல்விகளாலும் அவமானங்களினாலும் மஹிந்த மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதுடன், மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Latest Offers

loading...

Comments