புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் அரச நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியா?

Report Print Agilan in அரசியல்

உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புக்களால் இலங்கை அரச நிறுவனங்கள் குழப்பநிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாகவும், இதனால் இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறினார்.

பொதுவாக புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடமே இவ்வாறாக அரச நிறுவனங்கள் ஒப்படைக்கப்படுவதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாக அமையும் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக கூறிக்கொண்டு படுகுழியில் தள்ளுவதாகவும், அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பதன் விளைவுகளை மக்களே எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த அரசு மறந்து விட்டதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குற்றம் சுமத்தினார்.

Latest Offers

loading...

Comments