பழிவாங்கல்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பதவி எதற்கு?

Report Print Vino in அரசியல்

பிரச்சினைகளுக்கு தீர்வினை உரிய முறையில் வழங்காமல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதால் எவ்விதமான பலனும் இல்லை இந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி பதவி எதற்கு என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

பத்தரமுல்லையில் மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்த்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வற் வரி விதிப்பு சட்ட விரோதமானது என உயர் நீதி மன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஆகவே சட்டத்திற்கு முரணாக அறவிடப்பட்ட வற் வரி மக்களுக்கு மீண்டும் சென்றடைய வேண்டும்.

இருப்பினும் அரசாங்கம் வற் வரி கொள்கையை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் அதனை திருத்தங்களுடன் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்தகைய செயற்பாட்டை கூட்டு எதிர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு பாராளுமன்றத்தில் அதற்கு எதிராக செயற்படவும் தேவைப்படின் மீண்டும் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளது.

எனினும் அப்பாவி நோயாளிகளுக்கு வற் வரி விதிக்கும் அரசாங்கம் சிகரட்டிற்கு வரியை அதிகரிக்குமாறு கூறினால் தடுமாறி நிற்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை உரிய முறையில் வழங்காமல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதால் எவ்விதமான பலனும் இல்லை, அவ்வாறு செய்வதாயின் நல்லாட்சி என எவ்வாறு கூற முடியும் அதற்கு எதற்கு ஜனாதிபதி பதவி?

எனினும் இவ்வாறான சட்ட விரோதமாக அறவிடப்பட்ட வற் வரியை மீண்டும் செலுத்த வேண்டும், அதே போன்று கடந்த காலத்திற்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற கூடாது .

இந்த நிலையை மீறி செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை கூட்டு எதிர் எடுக்கும் எனவும் இன்று குழப்பகரமான நிலையில் அனைத்து விடயங்களும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments