முழு நாடே ஆச்சரியமடையும் - நிதி அமைச்சர்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முழு நாடே ஆச்சரியமடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். சகல சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் சவாலை வெற்றிகொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொடர்புடைய அமைச்சுக்கு நிதி ஒதுக்கீட்டுக்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Latest Offers

loading...

Comments