அரசியல் கைதிகளின் போராட்டம் - நாடாளுமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்த கூட்டமைப்பு

Report Print Rakesh in அரசியல்

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஏழு முக்கியஸ்தர்களுக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தை சிறைச்சாலைகள் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சர் இவ்விடயத்தினை கருத்திலெடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கான குறைநிரப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

அவர்கள் காலவரையறையின்றி மேற்கொள்ளவுள்ள இந்தப்போராட்டம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் எதிர்கட்சித்தலைவர், நீதி அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர், பிரதம நீதியரசர், சட்டம் ஒழுங்கு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு எழுதிய கடிதங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்குமாறு கைதிகள் கோரியபோதும் அதனை ஏற்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஆகவே, குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தாம் அவசர கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments