அரசியலமைப்பை உருவாக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்ன?

Report Print Ajith Ajith in அரசியல்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முடியாமல் போனமைக்கான காரணத்தை ஐக்கிய தேசியக்கட்சி வெளியிட்டுள்ளது

அநுராதபுரம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஏனைய கட்சிகள் நம்பிக்கை வைக்காததன் காரணமாகவே இந்த அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது போனதாக தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் புதிய அரசியல் அமைப்பொன்றின் மூலம் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை பெற்றுக்கொடுப்பதே தற்போதைய தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.

Latest Offers

loading...

Comments