மைத்திரி - ரணிலுக்கு இடையில் மீண்டும் மோதல்! காரணம் என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட 67 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த உறுப்பினர்கள் கட்சியின் அனுமதி பெற்று இந்த பயணத்தில் ஈடுபடவில்லை. எனினும் ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் இணைந்து கொண்டுள்ளமையினால் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் நேரயாக ஜனாதிபதியின் அவசியத்திற்கமைய செயற்பட்டு வருவதனை சில காலமாக கட்சி அவதானித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொண்டிருந்த அதே சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேராவும் கலந்துக் கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தில் கலந்துக் கொள்ள வேண்டாம் என கட்சி தலைமைத்துவம் அஜித் பீ. பெரேராவுக்கு அறிவித்திருந்த போதிலும் அவர் அதனை கருத்திற்கொள்ளாமல் அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது வரையில் நிவ்யோர்க் பயணத்திற்காக உரிய அனுமதி பெறாமல் இணைந்துக் கொண்ட அனைவருக்கும் உரிய காரணத்தை கூறுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தொடர்பில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த 67 பேர் நிவ்யோர்க் செல்வதற்காக ஒருவருக்கு 20 இலட்சம் என்ற ரீதியில் அரசாங்கம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Offers

loading...

Comments