சொந்த செலவில் சூனியம்! உறுப்பினர்களின் முற்றுகைக்குள் பசில்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக மாற்று அரசியல் சக்தி ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அதற்கான புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் எண்ணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எப்படியாவது பாரிய வெற்றி ஒன்றை புதிய கட்சியின் சார்ப்பில் பெற்றுக்கொள்ள பசில் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னாள் இராணுவ அதிகாரிகளை தேர்தல் வேட்பாளராக களமிறக்க பசில் திட்டமிட்டுள்ளார்.

பசிலின் இந்த திட்டத்திற்கு முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு பிரயோகிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் தீர்மானத்தை கைவிடவில்லை என்றால் தாம் மைத்திரி தரப்பிற்கு ஆதரவு வழங்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய்வதற்கு தீர்மானிப்பதாக எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக பசில் ராஜபக்ச மற்றும் அவரது குழு பிரதானிகளுக்கு, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரையில் நெருக்கடி காரணமாக புதிய அரசியல் கட்சி, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க முன்னரே அந்த அணியினருக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை ஆபத்தான நிலையாக பசிலுக்கு மாறியுள்ளது.

அவ்வாறு தொடர்ந்தும் “இராணுவம்” என்ற லேபிள்களை கொண்டு தேர்தலில் வெற்றி பெற முடியாதெனவும், இராணுவத்தினரால் வெற்றி பெற முடியும் என தமது தலைமைத்துவம் நம்பிக் கொண்டிருந்தால் இந்த பயணத்தின் தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என குறித்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் தொடர்பில் மிகவும் ஆதரவுடன் செயற்படுகின்றமையினால் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினரை பயன்படுத்துவது ஒரு நகைச்சுவைக்குரிய விடயமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து, அந்த கட்சியை பிளவுபடுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களுக்கும், உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச மட்டத்தில் பல பிரபலமான நபர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்துக்கு தேவையான மக்களையும் பஸ்களில் அழைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அந்த நபர்களை கருத்திற் கொள்ளாமல் இராணுவத்தினருக்கு வேட்பு மனு வழங்குவதன் மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தடை ஏற்படும் என்பதனால் இந்த முன்னாள் உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments