இனவாதத்தை தூண்டுவதே விக்கியின் வேலை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Report Print Vino in அரசியல்

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்­துன்­நெத்தி குற்றம் சுமத்­தியுள்ளார்.

நேற்று முன்தினம் (24) யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியின் போது முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்­துன் ­நெத்தியிடம் வின­விய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­னோ­ருக்கு தற்போது தேவை­யா­னது சமஷ்டி தீர்­வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவ­சி­ய­மாக உள்­ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள மக்களிடையே பிரி­வி­னை ­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இவர்கள் முயற்­சிக்­கின்­றனர், இது தவறான விடயம்.

எனவே ஒற்றையாட்சி மூலம் மாத்திரமே அதி­காரப் பர­வ­லாக்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments