புதிய கட்சியை ஆரம்பித்தாலும் மகிந்தவால் ஆட்சிக்கு வர முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

மஹியாங்கனை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதியை சேர்ந்த மூன்று பேரும் குமார வெல்கமவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும் மகிந்த ராஜபக்சவுக்கு உடனடியாக ஆட்சிக்கு வந்து விட முடியாது.

அரச அதிகாரத்தை வைத்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்து கொண்டு பொதுத் தேர்தலில் தோற்ற மகிந்தவுக்கு மீண்டும் இலகுவில் ஆட்சிக்கு வந்துவிட முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரில் நான்கில் மூன்று வீதத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றனர்.

மீதம் இருப்பவர்களும் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து விடுவார்கள்.

அரசாங்கத்துடன் இணைய போகும் கூட்டு எதிர்க்கட்சியினர் யார் என்பதை ஜனாதிபதி கூறினால்தான் நாட்டுக்கு அது முக்கியமானதாக இருக்கும் எனவும் ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments