திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த தேர்தலின்போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசியமாக செய்துக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு ஆவணம் ஒன்றை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டார்.

அதில், ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள படையினரை விலக்கிக்கொள்வதற்கு மைத்திரிபால, ரணிலுக்கு உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான ஒரு ஆவணம் கைச்சாத்திடப்படவில்லை என்று மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் மறுத்திருந்தனர்.

இதனையடுத்து திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி, லஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறையிட்டது.

இதன்அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments