எப்படியான அழுத்தங்கள் கொடுத்தாலும் அடிப்பணிய போவதில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

மிகவும் நியாயமான மற்றும் அத்தியாவசிய விடயங்களின் அடிப்படையில், தான் பயன்படுத்திய வாகனம் குறித்து தேடும் தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியின் தலையீட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாடகையில் மேல் மாகாண சபை உறுப்பினரான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு வாகனம் ஒன்றை வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று முற்பகல் அங்கு சென்றிருந்த வீரவங்ச, ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

அமைச்சராக பதவி வகித்த போது ஜனாதிபதி செயலகத்தினால் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று இரண்டாவது முறையாக என்னை அழைத்துள்ளது.

எட்கா உடன்படிக்கையில் கையெழுத்துவது தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக இந்திய அமைச்சர் ஒருவர் இன்று இலங்கை வருகிறார்.

உடன்படிக்கை தொடர்பில் விவாதங்கள் ஏற்படுவதை தடுத்து அவசரமாக கையெழுத்திட அரசாங்கம் தயாராகி வருகிறது.

எட்கா உடன்படிக்கை உட்பட நாட்டுக்கு ஏற்படப் போகும் அரசியல் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போர், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படுகின்றனர்.

அழுத்தங்களை கொடுத்து எங்களை அடிப்பணிய வைக்க முடியுமா என்று அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் நாங்கள் அடிப்பணிய மாட்டோம் எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments