நிதியமைச்சரை கட்டுப்படுத்த கோரும் டியூ. குணசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் முன்னர் நிதியமைச்சரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோரிக்கை விடுப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நிதியமைச்சர் முதலாளித்துவ நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகிறார்.

தேசிய இறைவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில்லை. இதனால், நிதியமைச்சரை கட்டுப்படுத்தாது, நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது.

ஜனாதிபதியும் பிரதமரும் பொருளாதாரத்தை கையாள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாது என்றால், ஆட்சி செய்வதில் பலன் இல்லை எனவும் டியூ. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments