பவித்ராவினால் பசில் - கோத்தபாய மோதல்! கோபமாக வெளியேறிய மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

கூட்டு எதிர்கட்சியின் தீர்மானமிக்க கலந்துரையாடலில் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ள கருத்தினால் பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு இடையில் சூடான வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் கொழும்பில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் 08ஆம் திகதி கட்டியெழுப்பப்படவுள்ள புதிய அரசியல் கட்சியின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து பசில் விலகிக் கொள்ள வேண்டும். கோத்தபாயவினால் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் பவித்ரா வன்னியாராச்சியினால், பசில் ராஜபக்சவுக்கு சாதகமான முறையில் கருத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோத்தபாய ராஜபக்சவினால் பவித்ரா மற்றும் பசிலுக்கு இடையிலான மிகவும் இரகசியமான தனிப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்கு கடுமையான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான உதித லொக்கு பண்டாரவினால் கோத்தபாய ராஜபக்சவை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் இருந்து அழைத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து அவ்விடத்தில் அமர்ந்திருக்கமால் தனது அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் கோத்தபாய ராஜபக்சவினால் விமல் வீரவன்சவுக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவுக்கு தொலைப்பேசி அழைப்பேற்படுத்தி கடுமையாக திட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆரம்ப காலப்பகுதியில் பிரபலமான அமைச்சு பதவி கிடைக்காத பவித்ரா வன்னியாராச்சி பின்னர் பசில் ராஜபக்சவுடன் காணப்பட்ட தனிப்பட்ட தொடர்புக்கமைய பிரபல அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜனவரி மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த பிரதமராகும் எதிர்ப்பார்ப்பில் இருந்த ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments