விரைவில் கைதாகப் போகும் அந்த பிரதி அமைச்சர் யார்? ரஞ்சன் ராமநாயக்கவிடம் பதில்

Report Print Kumutha Kumutha in அரசியல்

நல்லாட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் விரைவில் கைதாவார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவினரால் இவர் விரைவில் கைதாவார் என்றும், இவர், 90 வீதமான விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரே கட்சி என்ற அனுதாபம் காட்டப்படுவதில்லை யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்குவதே நல்லாட்சியின் பண்பு என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அமைச்சர் ரிசாட்பதியுதீன், ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 15 அமைச்சர்களிடம் இதுவரை லஞ்ச ஒழிப்பு விசாரணை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஒரு நற்செய்தி வந்ததாகவும், விரைவில் நல்லாட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் சிறைக்கு செல்வார் என்றும், இவ்வாறு கைது செய்யப்பட்டால் ஆளுங்கட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே வரலாற்றில் முதல் தடவையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments