மஹிந்தவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்போகும் எட்டாம் திகதி!

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை அரசியலில் மஹிந்த ராஜபக்ச அளவிற்கு அதிகபட்சம் புகழ்பெற்ற ஒருவரும் இல்லை. அதிகபட்சம் சரிவுகளை சந்தித்த ஒருவரும் அவருக்கு இணையாக இல்லை.

வரலாற்றில் இல்லாத வகையில் நினைவுகளை பதித்து யுத்த காலப்பகுதிகள் இரண்டின் இறுதியில் மஹிந்த கௌரவமாக ஓய்வு பெற்றிருந்தால் அவர் இந்த நாட்டினுள் கடவுளுக்கு சமமாக கருதுவதற்கு வாய்ப்புகள் காணப்பட்டன. வாழ்நாள் முழுவதும் அவர் இந்த நாட்டு அரசியல் துறையின் முதன்மையாளராகுவதற்கு இடமிருந்தது.

எனினும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு மஹிந்த தவறியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் அவர் செயற்பட்ட முறை சமூகத்தினுள் அவருக்கு காணப்பட்ட கௌரவத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் எட்டாம் திகதி இரத்தினபுரி நகரத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய அரசியல் கட்சியானது மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச என்ற நாமத்தை அரசியல் ரீதியில் முழுமையான அப்புறப்படுத்துவதற்கு காரணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய அரசியல் நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள திகதியே அதன் எதிர்காலத்திற்கு எவ்வளவு துரதிர்ஷ்டமாக காணப்படும் என்பது தொடர்பில் துப்பு கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக தனது பேனையை எடுத்த சண்டே லீடர் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது எட்டாம் திகதியாகும். அத்துடன் நிறுத்தாமல் ராஜபக்சர்களின் ஆலோசனைக்கமைய பாரத லக்ஷ்மன் கொலை செய்யப்பட்டதும் எட்டாம் திகதியாகும்.

குறித்த இரண்டு சம்பவங்களும் ராஜபக்சர்களின் ஒரு தசாப்த அரசியல் நிறைவுக்கு வருவதற்கு காரணமாக இருந்தன. அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு தங்கள் வாக்குகளை பயன்படுத்திய 62 இலட்ச மக்களினால் ராஜபக்ச ரெஜிமென்டை துரத்தியடிக்கப்பட்டதும் 8ஆம் திகதி ஒன்றிலாகும்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு பார்க்கும் போது எட்டாம் திகதி போன்று துரதிர்ஷ்டமான திகதி ஒன்று முழு மாதத்திலுமே இல்லை அரசியல் அவதானிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் இறுதி அரசியல் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையுடன் பார்த்துக் கொண்டிருப்பதனை தவிற வேறு ஒன்றையும் மேற்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது.


You may like this video

Latest Offers

loading...

Comments