புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது உண்மை!- பந்துல

Report Print Samy in அரசியல்

சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும் போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவுக்கு அடிக்க ஆரம்பிக்கும் போது, அவருடன் இருந்த சிலர் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் இடங்களுக்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

மஹிந்த ராஜபக்சவுக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியையும், அவருடன் இருந்து கொண்டு திருப்பி அடிப்பதற்கே, கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள நாம் அவருடன் இருக்கின்றோம்.

நாம் ஒரு போதும் மஹிந்த ராஜபக்சவை தனித்து விட, விட மாட்டோம் எனவும் பந்துல குணவர்தன இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.


You may like this video

Latest Offers

loading...

Comments