மஹிந்த அணியின் சவால்களை முறியடிக்க திட்டம் வகுக்கும் மைத்திரி அணி!

Report Print Rakesh in அரசியல்

மஹிந்த அணியின் சவால்களை முறியடித்து கட்சியைப் பலப்படுத்துவதற்காக புதுத்திட்டம் வகுக்கும் பணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன்படி, சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைக் கட்டியெழுப்புவதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்பும் சிறுகட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுகள் நடத்தப்பட்டு இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவற்றை ஒருங்கிணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, சுதந்திரக் கட்சி இரண்டுபட்டால் பிளவுபட்டிருக்கும் இரு அணிகளாலும் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.

இது மஹிந்தவுக்கும் தெரியும். ஆனால், அவர் என்ன செய்கின்றார் எனப் புரியவில்லை. கட்சியுடன் இருப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், புதுக்கட்சிக்குரிய வேலையை ஆரம்பித்துவிட்டார்.

எனவே, அந்தக் கூட்டணியால் சுதந்திரக் கட்சிக்கு எழும் சவால்களை முறியடிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து வருகின்றோம்' என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த அணியையும், மைத்திரி தரப்பையும் இணைப்பதற்கு சு.கவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சிகள் யாவும் தோல்விகண்டுள்ளன.

எனவே, இவ்விரு தரப்புகளுக்குமிடையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடும் போட்டி நிலவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

Latest Offers

loading...

Comments