நீதிமன்றின் தீர்ப்பு ஆச்சரியமளிக்கின்றது!

Report Print Kamel Kamel in அரசியல்
195Shares

நீதிமன்றின் தீர்ப்பு ஆச்சரியமளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வற் வரி அதிகரிப்பு சட்ட மூலம் தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முழு நாட்டையும் மக்களையும் இருளில் மூழ்கடிக்கச் செய்யும் வற் வரி திருத்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது.

குறைந்தபட்சம் மனைவிவுடன் சண்டை போட்டுக் கொண்டு வற் வரி வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றிற்கு வராமல் வீட்டில் இருக்கவும்.

இந்த பிழைக்கு துணை போக வேண்டாம், வற் வரி அதிகரிப்பிற்கு மக்கள் ஆணையில்லை.

அரசாங்கம் ஊடக அடக்குமுறையை உச்ச அளவில் மேற்கொள்கின்றது.

சீ.எஸ்.என் அலைவரிசையின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.வெளியில் தெரியாத ஓர் ஊடக அடக்குமுறை வெளிச்சத்திற்கு வந்த ஓர் நிலைமையோகவே இதனைக் கருத வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்..

Comments