அரசாங்கம் பயங்கரமான ஓர் நிலையை நோக்கி நகர்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றது, அது பொலிஸ் இராச்சியமொன்றுக்கான பயணமாகும்.
பாதுகாப்பு தரப்பினரை தந்திரமான முறையில் தமது பக்கம் வளைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதன் காரணமாகவே லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு போன்றனவற்றுக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பாரிய வர்த்தகர்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் வரி 26 வீதத்திலிருந்து 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித சலுகையும் நிவாரணமும் வழங்கப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.