நாமலுக்கு உயர் பதவி! கூட்டு எதிரணியை மடக்க மைத்திரி மௌனம்

Report Print Vethu Vethu in அரசியல்
635Shares

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பிற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு தற்போது உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் பதில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு தரப்பிற்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக, மஹிந்தவுக்கு கௌரவமான பதவி ஒன்றை வழங்கி ராஜபக்ச குடும்ப உறுப்பினர் உயர் பதவி ஒன்றை வழங்குவதற்கு மஹிந்த அமரவீரவினால் முன்வைத்த யோசனை மூலம் இணக்கம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் இணக்கப்பாட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக சமல் ராஜபக்சவின் பெயர் தீர்மானிக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் நாமல் ராஜபக்சவுக்கு பொறுப்பான பதவி ஒன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டால் கலந்துரையாடலை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அமரவீரவை சந்தித்து அறிவித்துள்ளனர்.

அமைச்சர் இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளார்.

கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments