கோப் குழு தலைவர் சுனில் ஹந்துநெத்தி மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்மேலும் கூறுகையில்,
சுனில் ஹந்துனெத்தி மீது எமக்கு மிகுந்த மரியாதை உண்டு.நாம் யாரையும் பாதுகாக்க எதனையும் செய்யவில்லை.
கணக்காய்வாளர் நாயகத்தின் 14 கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன,
இந்த அனைத்து கணக்கு அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
நாம் மனச்சாட்சிக்கு இணங்கவே வேலை செய்கின்றோம்.கோப் குழுவில் வைத்து விவாதம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த விவாதங்களின் போது சுனில் ஹந்துனெத்திக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என அவர் கோரியுள்ளார்.