நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபைகளுக்கு தேர்தல்கள் இன்றியே பெண்களின் பிரதிநிதித்துவங்களை நிரப்புவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.
குறித்த விடயம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் லச்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பிரதிநிதிகள் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமையை அடுத்தே இப்படி ஒரு ஏற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அமைச்சர் லச்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.