கிளிநொச்சி மாவட்டத்திற்கு விரைவில்தீயணைப்பு பிரிவு கட்டடம் - பா.உ சிறிதரனுக்கு அமைச்சர் உறுதி

Report Print Arivakam in அரசியல்
91Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவிற்கான கட்டடம் மற்றும் பொதுச்சந்தைக்கான கட்டடத்தொகுதி என்பவற்றை ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

நேற்று(25) பிற்பகல் 3.00 மணியளவில் பாரளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திபொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சநாதன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த செம்டம்பர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச்சந்தைகடைத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 110 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியதுடன் பெருமளவான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டன.

இதேவேளை,தீயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாமையினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவசரமாக தொடர்புகொண்டு யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினை வரவழைத்ததாகவும் இராணுவத்தினரின் உதவியுடனும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுன்றது.

இவ்வாறான விபத்துக்களின் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு பிரிவினை உருவாக்கி தருமாறும், தீயணைப்பு பிரிவு இன்மையால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிட்டதாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஸ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தாக கூறியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையினை நகர சபையாகவும் கண்டாவளை உபசபையினை தனியான பிரதேச சபையாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் சார்பில் இரத்தினமணி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments