விமல் வீரவன்சவின் வீட்டில் வைத்து இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் இன்று அவரது ஹோகந்தர வீட்டில் வைத்து இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
லஹிரு ஜனித் எனும் பெயர் கொண்ட 24 வயதான குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக தற்போது பொலிசாரின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன..
சம்பவம் தொடர்பில் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்ச பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது விமல்வீரவன்ச வீட்டில் இருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.