கோப் குழுவிற்கு பரிந்துரைகளை முன்வைக்க முடியாது! சுஜீவ சேனசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்
84Shares

குற்றப் புலனாய்வு திணைக்களம் அல்லது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு ஆகியன போல் கோப் குழுவுக்கும் பரிந்துரைகளை முன்வைக்க முடியாது எனவும் தனி நபர் இறுதி அறிக்கையை வழங்க முடியாது எனவும் சர்வதேச வர்த்தக விவகார ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோப் குழுவின் அறிக்கையானது அதில் அங்கம் வகிக்கும் அனைவரது கருத்துக்களும் உள்ளடங்கிய அறிக்கையாகும்.

அறிக்கை வெளியிடப்படும் முன்னர் அதில் உள்ளவற்றை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுஜீவ சேனசிங்க இதனை கூறியுள்ளார்.

கோப் குழுவின் பரிந்துரை தொடர்பில் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுஜீவ சேனசிங்க, அஜித் பீ. பெரேரா தனது அண்ணனோ தம்பியோ கிடையாது என்றார்.

தொடர்ந்தும் பேசி அவர், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பிலான முழு கோப் குழுவின் அறிக்கையே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

அதேபோல் கோப் குழுவின் நடவடிக்கை நடக்கும் விதம் குறித்து ஹந்துன்நெத்திக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments